http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 04, 2014


தமிழர்களின் (Tamils, Tamilians) வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இவர்கள் தெற்காசிய திராவிட இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களின் தாய் மொழி தமிழ். தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்த மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 
1800-களில் பிரிட்டிஷ் குடியேற்றவாத அரசாங்கத்தால் பெரும் தோட்டங்களில் பயிர்ச் செய்வதற்காகத் தென் இந்தியாவில் இருந்தும், இலங்கையின் வடபகுதியில் இருந்தும் அழைத்துச் செல்லப் பட்டவர்கள். இவர்கள் பெரும் அளவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப் பட்டார்கள். இவ்வாறே மொரிசியஸ், மடகாஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 


20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெறுவதற்காக மத்திய ஆசிய நாடுகளுக்கும் சென்று வாழ்கின்றனர். 1950-களுக்குப் பின்னர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவிலான ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். 


உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் ஒன்பது மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.

தமிழர்களின் வரலாறு

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-