- Back to Home »
- யாயும் ஞாயும் »
- யாயும் ஞாயும் யாரா கியரோ
Posted by : Unknown
October 03, 2014
யாயும் ஞாயும் யாரா கியரோ - என்பது ஒரு குறுந்தொகைப் பாடல். அந்தப் பாடல் டத்தோ சரவணின் திருமணப் பத்திரிகையில் ஒரு முத்திரை பதித்தது. அதை நினைவு படுத்தி, அந்தப் பாடலுக்கு விளக்கம் கொடுத்தார் ஈப்போ நண்பர் நரேந்திரன். இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இருந்தாலும் அதை நினைவு படுத்திய அவருக்கு நன்றிகள்.
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர்கள் அல்லர். என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த வகையிலும் உறவினர் அல்லர். நானும் நீயும் கூட ஒருவரை ஒருவர் முன்னர் அறிந்தது இல்லை. என்றாலும் கூட, நம் நெஞ்சம் செம்புலத்தில் பெய்த நீர் போலக் கலந்து விட்டது. எனவே நான் உன்னைப் பிரிவேன் என வருந்த வேண்டாம் என்று தலைவன் தலைவிக்கு ஆறுதல் சொல்கிறான்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே