- Back to Home »
- இனிது தமிழ் இனிது »
- இனிது இனிது தமிழ் இனிது
Posted by : Unknown
October 04, 2014
அமிழ்தினும் இனிய தமிழுக்கு
அழகிய தளம் தந்த தலைவா
கணினியுகம் தாண்டியும்
காலமெல்லாம் உன் புகழ் வாழ்க!
அழகுக்கு அழகு செய்ய
அணிகலன் அளிக்கும் தோழரே
பொன்நகை மோகம் தீராத் தமிழ்க்கன்னி
போற்றுவாள் உங்களின் அன்பெண்ணி
நன்றியைச் சொல்ல என்ன வழி?
நல்லதாய் நீயும் படைப்பு அளி
படைக்கும் வழி பழகும் வரை
படித்தவற்றுக்கு பாராட்டளி
வாதம் செய்; பிடிவாதம் வேண்டாம்
தர்க்கம் செய்; குதர்க்கம் வேண்டாம்
நீர்க்குமிழி கோபம் உடைய தேவை ஒரு நொடி
ஊசி கொண்டு குத்துவதால் தேவையற்ற வலி
அன்பே நம் மதம், அமைதியே தேசிய கீதம்
பண்பே பண்டமாற்று, பகிர்தலே தேச மொழி
உழைப்பே மூலதனம், உண்மையே விளம்பரம்
உருவாக்கும் வெற்றி எல்லாம் தமிழுக்கே சமர்ப்பணம்.

