மலாக்கா அலோர் காஜாவில்
By : Unknown
ஆகஸ்டு 06, 2017
உலகமயச் சவால்களை எதிர்கொள்ள நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகமயச் சவால்களை எதிர்கொள்ள நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனையுடன் கூடிய நாடாக மலேசியாவை உருமாற்றுவோம். நடப்பு உலகமயச் சவால்களை எதிர்கொள்ள இளம் தலைமுறை சுய ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது அவசியம். போட்டியாற்றல் மிக்க வேலைச் சந்தையில் சிறந்த வாய்ப்புக்களைக் கைப்பற்ற இளையோர் அனைத்து துறைகளிலும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
உலகமயமாதலால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின் தள்ளிவிடப்படாமல் இருக்கவும் மேலை நாடுகளுக்கு இன்னும் அடிமையாக இருப்பதைத் தவிர்க்கவும் பல திட்டங்களைச் செவ்வனவே வடிவமைத்து வருகின்றன. வளர்ச்சி கண்டு வரும் நாடான மலேசியாவில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் மற்றும் சபா சரவாக்கின் பூர்வக்குடியினர் அல்லது பூமிபுத்திரா வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியாவில் பல மதங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் உலகமய தாக்கலினை எதிர்கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு வித்திட முடியும்.

Tag :
மலாக்கா அலோர் காஜாவில்,
ஜாசின் கோவிந்தசாமியின் பயணப் பாதை
By : Unknown
-ஜாசின், 06.08.2017
மலாக்கா ஜாசின் வட்டாரத்தில் நன்கு அறிமுகம் ஆன நல்ல மனிதர். நற்சேவையாளர் அமரர் ஆசிரியர் ஆர். கோவிந்தசாமி. ஜாசின் பகுதியின் பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேவை செய்துள்ளார்.
மலாக்கா ஜாசின் வட்டாரத்தில் நன்கு அறிமுகம் ஆன நல்ல மனிதர். நற்சேவையாளர் அமரர் ஆசிரியர் ஆர். கோவிந்தசாமி. ஜாசின் பகுதியின் பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேவை செய்துள்ளார்.
அவரின் 'பயணப் பாதை' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஜாசின் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு டத்தோ எம்.சரவணன் தலைமை தாங்கிச் சிறப்பு செய்தார்.
கொழும்பு கம்பன் விழா 2016
By : Unknown
March 25, 2016
கொழும்பு – மலேசிய நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக... அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்.
கொழும்பு – மலேசிய நாட்டின் அரசியல்வாதிகளில் சிறந்த தமிழ்ப் பேச்சாளராக... அதிலும் இலக்கிய உரை நிகழ்த்துபவராகத் திகழ்பவர் மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்.
உள்நாட்டில் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பலமுறை வரவழைக்கப்பட்டு உரையாற்றியவர் சரவணன்.
அந்த வகையில் கொழும்புவில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் விமரிசையாக கொழும்புக் கம்பன் விழா 2016 நடத்தப்பட்டது.
அந்த வகையில் கொழும்புவில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் விமரிசையாக கொழும்புக் கம்பன் விழா 2016 நடத்தப்பட்டது.
உலகமெங்கும் இருந்து தமிழ் ஆன்றோர்களும் சான்றோர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவில் நம் நாட்டின் டத்தோ எம்.சரவணனும் பிரதம விருந்தினராக சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
கொழும்புக் கம்பன் விழாவில் சரவணன் தொடக்கவுரை ஆற்றி, கொழும்பு கம்பன் விழாவில் வருகை அளித்த அனைவருக்கும் கம்பனின் தனித்தமிழ் அழகை கண்ணதாசன் பாடல் வரிகளுடன் இணைத்து செம்மையுற விவரித்து உரையாற்றினார்.
Tag :
கொழும்பு கம்பன் விழா 2016,
நாம் பேரியக்கம் - 1
By : Unknown
’நாம்’ பேரியக்கத்தின் விளக்கக் கூட்டம் 14/10/2014 மாலை கோலாலம்பூரில் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. அதிகாரப் பூர்வமாக ’நாம்’ பேரியக்கத்தின் தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சருமான டத்தோ எம். சரவணன் தொடக்கி வைத்தார்.
சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் 24 ஆண்களுக்கு ’நாம்’ சிலாங்கூர் நிலங்களை வாடைக்கு வழங்கி உள்ளதாக டத்தோ சரவணன் தெரிவித்தார். இதுவரை 109 திட்டங்கள் பரிசோதனை முயற்சியில் தொடங்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தீபாவளிக்குப் பிறகு நிலம் சொந்தமாக வைத்து இருப்பவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கவிருப்பதாக தெரிவித்தார்.
’நாம்’ திட்டத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் பலருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த போவதாகவும் தெரிவித்தார். ’நாம்’ தோட்டங்களில் வேலை செய்வோருக்கு 2000 வெள்ளி மாதச் சம்பளமாக வழங்கப்படும் எனவும் டத்தோ விழாவில் தெரிவித்தார்.

நாம் பேரியக்கம் - 1,
இரட்டைமலை சீனிவாசன்
By : Unknownதிவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்
(ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945)
திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945), ஓர் அரசியல்வாதி, ஒரு சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், ஒரு வழக்குரைஞர், ஒரு பத்திரிகையாளர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த போராட்டவாத எனப் பல முகங்களைக் கொண்டவர். தாழ்த்தப் பட்டவர் மகா ஜன சபையைத் தோற்றுவித்து, ‘தாழ்த்தப் பட்டவர்’ என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்து இருக்கிறார். தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859-இல் அன்று மகனாகப் பிறந்தார். அந்த மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்க மாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அவருடைய குடும்பம்.

பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேரைத் தவிர மற்றவர்கள் உயர்ச் சாதியினர். சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப் பட்ட காலம். உயர்ச் சாதி மாணவர்களுடன் பழகுவதால் தன்னுடைய சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்து விட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.
படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்’ என்றார்.
1884-ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காக போராட வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
சீனிவாசன் 1980-ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப் ‘ப**ன்’ என்று பெயர் வைத்தார்.
அந்தப் பத்திரிகை15 ரூபாய் மூலதனத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. 1893-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு இயந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-இல் ‘தாழ்ந்தவர் மகா ஜன சபை’யை இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1895-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் ’தாழ்ந்தவர் மகா ஜன சபை’ வரவேற்றது. 1898-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து மகாராணியார் அகம் மகிழ்ந்து 1898-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி பதில் எழுதி இருக்கிறார்.
அக்காலத்தில் பெரும்பாலும் உயர் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பு இல்லை.
1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டு காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ஆம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.
1893-ஆம் ஆண்டு ‘ப**ன்’ பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம் 30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.
1904-இல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்த போது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.
கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.
1926-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘ராவ்சாகிப்’ பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது.
இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-இல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.
”செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்” என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.
1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்க மாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்க மாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக் குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-இல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.
இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர் நீத்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல் பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். தீண்டாமையை ஒழிக்கும் தர்மத்தை விரும்புவோருக்கு இரட்டைமலை சீனிவாசன் என்றும் நினைவில் வாழும் மனிதராக வாழ்கின்றார்.

இரட்டைமலை சீனிவாசன்,
டாக்டர் ராதாகிருஷ்ணன்
By : Unknown
அரசியல் வாழ்க்கை, சமயம் சார்ந்ததாக இருந்தால், மனிதர்களிடையே நிலவும் சமநிலை வளர்ச்சிக்கு அதுவே தீங்காக அமையும். அரசியல் வாழ்க்கையில் இணையும் போது அதனால் கிடைக்கக் கூடிய அதிகாரத்தினால் மயங்கி நெறி பிறழாமல் வாழ்வதற்கு, மனித நிலை கடந்து தன்னைத் தானே ஆளுகின்ற திறம் வேண்டும். அதே மாதிரி, வாழ்ந்து காட்டியவர் தான் ‘தத்துவமேதை’ டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன்!
அன்றைய காலத்து சென்னை மாநிலத்தின் திருத்தணி எனும் சிறு கிராமம் இவருடைய ஊர். அங்கு, 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சர்வபள்ளி வீராசாமி.
அன்றைய காலத்து சென்னை மாநிலத்தின் திருத்தணி எனும் சிறு கிராமம் இவருடைய ஊர். அங்கு, 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சர்வபள்ளி வீராசாமி.

தனது ஆரம்பக் கல்வியைத் திருத்தணி, மாவட்டக் கழகப் பள்ளியில் பயின்றார். பின்பு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை ஹெர்மன்ஸ் பர்க் லுத்துரன் மிஷன் பள்ளியில் பயின்றார். வேலூர் ‘ஊரிஸ் கல்லூரி’யில் புகுமுக வகுப்பை முடித்தார். கல்லூரி மாணவராக இருக்கும் போதே சிவகாமு என்பவரை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளை நிறைவு செய்தார். புகுமுகு வகுப்பு முதல் முதுகலை வரை உதவித் தொகை பெற்று கல்வியை முடித்தார்! முதுகலைத் தேர்வின் போது “வேதாந்தங்கள் கூறும் அறமும் அதன் மெய் விளக்க மேற்கோளும்” என்ற ஆய்வுக் கட்டுரையை வரைந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, கல்வித் துறையில் அரசு ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1909 ஆம் ஆண்டு தத்துவ இயல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பித்தலில் பட்டம் பெறுவதற்கு சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் சென்னை மாநிலக் கல்லூரியே மறுபடியும் இவரை ஏற்றுக் கொண்டது.
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப் பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டினார். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராக விளங்கினார்.

‘பன்னாட்டு அறிவியல்’, ‘ஆசியவியல் மறுசீராய்வு’ போன்ற பன்னாட்டு இதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.
மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியராக 1918 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிக்குச் சென்றார். மகாகவி இரவீந்தரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அங்கு தத்துவ இயல் பேரவையைத் தோற்றுவித்தார். அந்தப் பேரவையில் நிகழ்ந்த முதல் சொற்பொழிவு செய்ய இரவீந்திரநாத் தாகூரை அழைத்தார்.
லண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசுப் பல்கலைக்கழகங்களின் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். அங்கு, மான்செஸ்டர் கல்லூரியில் சொற்பொழிவாற்றினார். அவரது அறிவார்ந்த சொற்பொழிவுகள் அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்களிடையே ஆர்வத் துடிப்பை ஊட்டியதுடன், மிகுந்த பாராட்டையும் பெற்றது.

கல்கத்தா பல்கலைக் கழகத்தின் முதுகலைக் கல்விக் கழகத்தின் தலைவராகவும், பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், பல்கலைக் கழக அமைப்பாண்மைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புகழ் பெற்ற பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றர். அப்போது, நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்கு முறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணை வேந்தராய் இருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்று மிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார்.

வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய போது, அந்தப் பல்கலைக்கழகத்தினைத் தனித் தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார்.
கீழ்த்திசைச் சமயங்களுக்கான பேராசிரியராக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் கழகத்தில், 1937 ஆம் ஆண்டு புத்தரைப் பற்றி ‘தலைமை ஞானி’ என்ற பொருளில் சிறந்த உரை நிகழ்ந்தினார்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி நலஞ்சார்ந்த பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அக்குழுவை இந்தியாவில் உள்ள இருபத்தைந்து பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிற்ப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார். அந்த அறிக்கை தற்கால இந்தியக் கல்வி முறைக்கு நல்வழிகாட்டும் தோன்றாத் துணையாக நின்று விளங்குகிறது!
உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அக்குழுவின் பரிந்துரைகள் துணை நிற்பனவாகும். ஆனால், இக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை செயல்படுத்தப் படாததால், உரிய பலனைத் தராமல் தூசு படிந்து கிடப்பது வேதனைக்குரியதாகும்.

ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1949 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். “இந்த மனிதர் பிற வழக்கமான தூதுவர்களைப் போல இல்லை. இவர் தனது இதயத்தில் மனித நேயமும், அன்பும் கொண்டவர்” என்று ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இவரைப் புகழ்ந்து உரைத்து உள்ளார்.
இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக டாக்டர். எஸ் இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு 1954 ஆம் ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவரின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது பெயரில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப் படுகிறது.
பாரதிய வித்யாபவன் தலைவர் கே.எம் முன்ஷி, டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ‘பிரம்ம வித்யா பாஸ்கரர்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
சாகித்திய அகாதெமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர் நிறுவனங்களைத் தமது அறிவாண்மையால் நடத்திச் சென்றார், சாகித்திய அகாதெமியின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1968ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். தத்துவ இயல் ஆய்வில் அவர் ஆற்றிய பணிக்காக டெம்ப்லீடன் பரிசு (Templeton Prize) வழங்கப் பட்டது. தத்துவமேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், 1975 ஆம் ஆண்டு எப்ரம் 14 ஆம் நாள் காலமானார்.
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் கல்விச் சிந்தனைகள் :
•அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவது தான் சிறந்தது.
•ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக் கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.
•அனைவருக்கும் உயர்க்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.
•கல்வியானது மனிதனை நெறிமுறைப் படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும்.
•பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும், கருத்துப் புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும்.
•ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் – கலைஞர்கள் – புதியன கண்டுபிடிப்பவர்கள் – மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் – ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

•பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டும்.
அவரின் சமூகச் சிந்தனைத் துளிகள் சில
•சாதியம், சுய சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப் படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

•கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.
•அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக் கூடாது.
தத்துவமேதையின் தனிப்பெரும் படைப்புகள் :
1. உண்மையைத் தேடி
2. இரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்
3. இந்தியத் தத்துவம்
4. ஓர் இலட்சியவாதி நோக்கில் வாழ்க்கை
5. கல்வி – அரசியல் – போர்
6. சமயமும் சமுதாயமும்
7. மாறிவரும் உலகில் சமயம்
இவை தவிர்த்து, இருபதுக்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான மேலும் பல நூல்களை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளார்.
தன் வாழ்நாள் முழுவதும் கல்வி உலகம் வளம் பெற அயராது பாடுபட்டவர்! சோதனைக் காலத்திலும் நிமிர்ந்து நின்று, நடுநிலையுடன் செயல்பட்டவர்! மக்களிடம் நம்பிக்கை விதையை நட்டவர்! எழுதியவாறே நடந்து கொண்டவர்! இலட்சிய ஆசிரியர்! வளமான அறிவுத் திறம் படைத்தவர்! அவரைத் ‘தத்துவமேதை’ என்று உலகம் புகழ்வது மிகவும் பொருத்தமாகும்!
Tag :
டாக்டர் ராதாகிருஷ்ணன்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
By : Unknown![]() |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்; விபச்சார ஒழிப்புச் சட்டம்; பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம்; பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம்; என பெண் உரிமைக்கான சட்டங்கள் கொண்டு வரக் குரல் கொடுத்தவர்.
‘நகராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க உரிமை வேண்டும். பெண்களுக்குத் தனியாகக் கல்வி நிலையங்கள் திறக்கப் பட்டுக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். பெண் நீதிபதிகள் நிறையப்பேர் நியமனம் செய்யப்பட வேண்டும். குழந்தைத் திருமணம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இப்படி பல வேண்டும் எனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மாமணி. அவர்தான் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி!
Muthulakshmi Reddi புதுக்கோட்டை நகரில் நாராயணசாமி-சந்திரம்மாள் இணையருக்கு 30.07.1886 ஆம் நாள் மூத்த மகளாகப் பிறந்தார். தனது நான்காவது வயதில், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார்; பின்னர் பள்ளியில் சேர்ந்து ஆறாம் வகுப்பை முடித்தார். வீட்டிலேயே தனது தந்தையாரிடம் பாடங்கள் பயின்றார். தனியாக மெட்ரிக்குலேசன் தேர்வை எழுதித் தேர்ச்சியும் பெற்றார். இவர் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை புதுக்கோட்டை நகரமே கொண்டாடியது.
முத்துலட்சுமி கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க விரும்பினார். ஆனால், அந்நாளில் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற விதி இருந்தது. முத்துலட்சுமியின் தந்தையார் புதுக்கோட்டை மன்னரிடம் சிறப்பு அனுமதி பெற்று மகளைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கே படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். கல்லூரியின் முதல்வரிடமும் பேராசிரியர்களிடமும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் 1907 ஆம் ஆண்டு சேர்ந்தார். அவரது மருத்துவப் படிப்பிற்கு புதுக்கோட்டை அரசர் உதவிப் பணம் அளித்து ஆதரவு நல்கினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில், முதன்மை மாணவராக விளங்கினார். பாராட்டுச் சான்றுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தன. தனிச் சிறப்போடு தேர்ச்சி அடைந்து 1912 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். இந்தியாவிலேயே மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரி என்னும் தனித் தன்மையையும், ‘டாக்டர் முத்துலட்சுமி’ முத்திரைப் பதித்தார்!
டாக்டர் நஞ்சுண்டராவ் என்கிற தேசிய இயக்கத் தலைவரின் இல்லத்தில் 1908 ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரை முத்துலட்சுமி சந்தித்தார். டாக்டர் முத்துலட்சுமியிடம் பாரதியார், பெண்ணுரிமை பற்றிய கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்டார் என்பதும் சரித்திரச் செய்திகள்.
மருத்துவப் படிப்பை முடித்து சென்னை எழும்பூரிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் சுந்தரரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மருத்துவ ஆற்றலையும், திறமையையும் அறிந்த இந்திய அரசு, அவரை மேல் படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பியது. லண்டனில் தனது மேல் படிப்பை சிறப்பாக முடித்தார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
தாயகம் திரும்பிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் நிலையை உயர்த்த அரும்பணியாற்றினார். பெண்களும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடலாம் என 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் இயற்றப்பட்டது.

தாயகம் திரும்பிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் நிலையை உயர்த்த அரும்பணியாற்றினார். பெண்களும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடலாம் என 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் இயற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டார். முதன் முதலில் சட்டமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் இடம் பெற்றது தமிழ் நாட்டில் தான். மேலும், சட்டமன்றத் துணைத் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்தார். இந்த பொறுப்பையும் இந்தியாவில் முதன் முதலில் வகித்த பெண்மணியும் இவரே.
“தமிழ்நாட்டில் கோவில்களில் நடனமாடும் பெண்களே தாசிகள் அல்லது தேவதாசிகள் எனப்படுவோர் ஆவர். இவர்கள் நடனமாடியும் பாட்டுப் பாடியும் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களுடைய தொழில் உலகிலேயே மிகத் தொன்மையான தொழில் என்று கருதப்படுகிறது.
தொடக்கத்தில் வேற்றுச் சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களின் கூடா ஒழுக்கத்தின் மூலம் பிறந்த பெண்களே கோயில்களில் தேவதாசிகளாக்கப்பட்டனர். ஆனால், நாளடைவில் மற்ற வகுப்பினர் கோயில்களுக்குப் பெண்களைத் தானமாக வழங்கியதாலும், பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டதாலும் ‘தேவதாசிகள்’ குலம் உருவாகியது என 1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தேவதாசிகள் கோவில்களில் பணிப் பெண்களாக இருந்தார்கள். விழாக் காலங்களில் இறைவன் வீதி உலா செல்கிறபோது தேவதாசிகள் வெண் சாமரங்கள் வீசினர். விளக்குகளை ஏந்திச் சென்றனர். நடனமாடினர். இறை இசைப் பாடல்களைப் பாடினர். அவர்கள் பரதம் பயின்று அக்கலையில் வல்லவர்களாக விளங்கினர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இழிவான இத்தேவதாசி முறை, பெண்களின் மரியாதையையும், உரிமையையும், மனத் திண்மையையும் பெரிதும் பாதிக்கக் கூடியது; குறிப்பிட்ட சாதிப் பெண்களை பாலியல் தொழிலில் கொண்டு சேர்த்தது; பின்னர், அவர்களையே இழிந்த சமூகத்தவராகக் கருதச் செய்தது! இது பெரும் சமூகக் கொடுமை மட்டுமல்ல, பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளையும் தகர்ப்பதாகும்.
“தேவதாசிகள் தொழிலை இந்து சாத்திரங்கள் யாவும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன. அதேசமயம் இந்துக் கோவில்கள் அத்தொழிலுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்துள்ளன. இந்து சமயத்தில் காணப்படும் பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்று” என்று ஆய்வாளர் எட்கார் தர்ஸ்ட்டன் தெரிவித்து உள்ளார்.
அரசின் சார்பாக முதன் முதலாக தேவதாசிகள் முறைக்கு ஆதரவு அளிக்க மறுத்தவர் சென்னை ஆளுநராக இருந்த வென்லாக் ஆவார்.
தேவதாசிகள் முறை ஒழிப்புச் சட்ட முன் வரைவு ஒன்றினை 1929-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 2-ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தாக்கல் செய்தார். இந்தச் சட்ட முன் வரைவு பலத்த விவாதத்திற்கு இடையில் நிறைவேறியது.
அதன் மீது அப்போதைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் பேசிய போது, “தாசிக் குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. நாமும் அந்தக் குலத்தைத் தோற்றுவிக்கவில்லை. வியாசர், பராசர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்றும் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. சமூகத்திற்குத் தாசிகள் தேவை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிக்கென்று படைக்கப் பட்டவர்கள். அது சாஸ்திர சம்பந்தமானது. தாசிகளை ஒழித்து விட்டால், பரத நாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதம் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாதச் செயலாகும், அநியாயமாகும்” என்று குறிப்பிட்டார்.
மனிதத் தன்மையற்ற, கேவலமான இப்பேச்சுக்கு தந்தை பெரியார், கடும் கண்டனம் தெரிவித்தார். “ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? முற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா?” என்று பெரியார் பதிலடி கொடுத்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற முழு ஆதரவும் அளித்தார்.
இந்தச் சமூகக் கொடுமையை ஒழிக்க 1868-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. ஆனால், தமிழக சட்டமன்றத்தில் 1922-ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டு 1924-ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 1925-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் அமலுக்கு வந்தது.
இந்தியாவில் 1929-ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போராட்டத்திற்கு ஆதரவாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘ஸ்திரி தர்மா’ என்ற இதழை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நடத்தினார். பெண்கள் நலனுக்காக பாடுபட அனைத்து இந்தியப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்துப் பாடுபட்டார்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியபின் அப்பெண்களைக் காப்பகத்தில் சேர்த்துக் கொள்ள விடுதிக் காப்பாளர்கள் இடம் தர மறுத்து விட்டனர். அதனால், அப்பெண்களைத் தம் வீட்டிலேயே இவர் தங்க வைத்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1930-ஆம் ஆண்டு ‘அவ்வை இல்ல’த்தைத் தொடங்கினார்.
அந்த இல்லம், தொடக்கப்பள்ளி – உயர்நிலைப் பள்ளி – ஆசிரியர் பயிற்சிப் பள்ளி – கைத்தொழில் பயிற்சிப் பிரிவு – செவிலியர் பயிற்சிப் பள்ளி – பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி – முதியோர் இல்லம் - என பல்கிப் பெருகி வளர்ந்து உள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிகாகோவில் 1933-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, பெண்ணுரிமை குறித்து அரியதோர் உரை நிகழ்த்தினார்.
சென்னை மாநகராட்சியின் நியமனக் குழு உறுப்பினராக 1937 முதல் 1939 வரை மிகச் சிறப்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பணியாற்றினார். புற்றுநோய் மருத்துவ நிலையத்தை ஆரம்பித்தார். அம்மருத்துவ நிலையத்திற்கு 1952-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அம்மையாரின் தீவிர முயற்சியால் சென்னையில் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் உருவானது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாரின் சேவைகளைச் சிறப்பித்து, இந்திய அரசு ‘பத்மபூஷன்’ விருதை அளித்துச் சிறப்பித்தது. தமிழ் நாடு சமூக நல வாரியத்தின் தலைவராகவும், இரண்டாவது முறையாக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார்.
இவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு 1989-ஆம் ஆண்டு முதல், ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு அரசு நிதி உதவி அளித்து வருகிறது.
பெண்கள் நலன், பெண்கள் உரிமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 22.07-1968-ஆம் நாள் இயற்கை எய்தினார். பெண் உரிமைக்காக தன் வாழ் நாள் எல்லாம் பாடுபட்ட ஒரு விடிவெளி மண்ணில் மறைந்தது. மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,